நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து; அலறியடித்து கீழே குதித்த பயணிகள்!

 
பேருந்தில் தீ
 

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், பயணிகள் அனைவரும் பதற்றத்தில் அலறியடித்தப்படியே கீழிறங்கி உயிர் தப்பினர். ஆம்னி சொகுசு பேருந்தின் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

பேருந்தில் தீ


சென்னையில் இருந்து ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று கோவை புறப்பட்டது. சொகுசு பேருந்து ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. ஓட்டுநர் கார்த்திகேயன் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். பேருந்தில் பயணித்தவர்களில் சிலர் வரும் வழியில் ஆங்காங்கே  இறங்கினர்.
சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே  தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து சென்றுகொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்திக்கேயன், பேருந்தை உடனடியாக சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, உடனடியாக பேருந்தினுள் இருந்த பயணிகளுக்கு பேருந்து தீப்பற்றி எரிவது குறித்து தகவல் தெரிவித்து உடனடியாக அவர்களை பத்திரமாக பேருந்தில் இருந்து வெளியேற உதவியுள்ளார்.

பேருந்தில் தீ

நள்ளிரவில் தூக்க கலகத்தில் இருந்த பயணிகள், திடீரென பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்து எரிவதைக் கண்டதும் அலறியடித்தப்படி கீழே குதித்து தப்பித்தனர்.
ஓட்டுநரின் இந்த துரித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அதே சமயம் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது குறித்து தகவலறிந்து வந்த சித்தோடு  போலீசார், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் பேருந்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.   இந்தச் சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!