நள்ளிரவில் பயங்கரம்.. பயங்கர தீ விபத்துக்குள்ளான மினி வேன்.. பகீர் வீடியோ வைரல்..!

 
மினி வேன்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அட்டை ஏற்றிச் சென்ற மினி வேன் தீப்பிடித்து எரிந்தது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே இரவு 11 மணியளவில் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார்ட்போர்டு ஏற்றிய மினி வேன் ஒன்று வந்தது.


திடீரென்று, அதன் முன்பக்கத்திலிருந்து ஒரு தீப்பொறி தோன்றியது. உடனே வேன் டிரைவர் கீழே இறங்கி கீழே மண்ணை எடுத்து அணைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை, தீ எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சோழவந்தான் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். நள்ளிரவில் சமயநல்லூர் அருகே அட்டைப்பெட்டிகள் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web