அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி... கயிறு கட்டும் நடத்துனர்... அரசுப்பேருந்து அவலம்...!!

 
பேருந்து கண்ணாடி

மிதவை பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, டிஜிட்டல் போர்டு, குளிர்சாதன பேருந்து, பிங்க் பேருந்து  என விதவிதமான அரசு பேருந்துகள்  தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில்  பல பேருந்துகள் ஓட்டை  உடைசலுடன்  பேருந்துக்குள் வெயில், மழை இலவசம் என்பதற்கேற்ப தான் இயக்கப்பட்டு வருகின்றன. திடீரென நடுவழியில் பழுதாகி நின்று விடுவதும் உண்டு. திடீரென பிரேக் வேலை செய்யாது.
பேருந்து கண்ணாடி

பீக் ஹவர்களில் வரும் பேருந்துகள்  தள்ளினால் தான் நகரும் என்ற நிலையில் அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் ஐலசா போட்டு தள்ளி விடுவர். அந்த வகையில்   கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு செல்லும்  அரசு பேருந்து புறப்படத் தயார் நிலையில் இருந்தது.  அப்போது கடலுார் அடுத்த வெள்ளகேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தின் பின்புறம் உள்ள கண்ணாடியின் ரப்பர் பீடிங் சேதமடைந்தது.இதனால்  கண்ணாடி கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டது.

பேருந்து கண்ணாடி


உடனடியாக ஓட்டுனர் பேருந்தை ஓரம் கட்டினார்.  பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர்.   ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்ணாடி கீழே விழாமல் இருப்பதற்காக, கயிறு மூலம் கட்டினர். அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை நடத்துநர் கயிற்றால் கட்டிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது. அரசு பேருந்து கண்ணாடியை நடத்துநர் கயிறு கட்டிச் செல்லும் புகைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web