சோகம்.. 5 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி..!

 
டீனு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தோப்பிரம்குடியை சேர்ந்தவர் டீனு (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு டீனு தனது 5 மாத குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் வீட்டில் சத்தம் எதுவும் கேட்காததால், டீனுவின் வீட்டின் அருகே உள்ள அவரது உறவினர் கதவைத் தட்டியுள்ளார்.

ADIMALY ❤️❤️❤️അടിമാലി ടൌൺ - YouTube

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ​​டீனு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மற்றொரு அறையில் டீனுவின் குழந்தை இறந்து கிடந்ததையும் கண்டார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்த டீனு மற்றும் அவரது 5 மாத குழந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 4 மாதங்களுக்கு முன்பு டீனுவின் கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அன்றிலிருந்து டீனு மனமுடைந்து காணப்பட்டதாக உறவினர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web