லாரி ஏறி இறங்கியதில் தலைநசுங்கி உயிரிழந்த தாய்... மகனை பள்ளியில் விட்டு திரும்பும் போது சோகம்...!!

 
ராஜேஸ்வரி

மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை மெயின் ரோட்டுக்கு அருகில் வசித்துவருபவர்  முத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவரது   கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து  வருகிறார்.  இவர்களுக்கு ஒரே மகன்  ராஜேஸ்வரி தினமும் ஸ்கூட்டியில் தனது மகனை அழைத்துச் சென்று மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதே  போல் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது   அதிவேகமாக வந்த லாரி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

விபத்து

விழுந்த அவர் மீது  லாரியின் பின் சக்கரம் ராஜேஸ்வரி தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு   தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்


 அத்துடன் இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிவேகமாக வந்த  லாரி ஓட்டுனரை   கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web