ரஷ்யாவில் மாயமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது... 22 பேர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று முன் தினம் புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர்.
மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!