சாலை ஓரத்தில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. திடீரென அதிவேகமாக மோதிய காரால் கோர விபத்து..!

 
சங்கர்

சேலத்தில் சாலையில் கார் மோதி நடந்து சென்றவர் இறந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் செவ்வாய்ப்பேட்டை அர்ச்சராமன் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் வெள்ளி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் வீட்டில் இருந்து பால் வாங்க சென்றார்.

ரோட்டில் நடந்து சென்ற நபர் மீது மோதிய கார்; சிசிடிவி வீடியோ காட்சிகள்

பின்னர் கடையில் பால் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பின்னால் அதிவேகமாக வந்த கார் சங்கர் மீது மோதியது. பலத்த காயமடைந்த சங்கர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 மணி நேரத்தில் இறந்தார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக போலீசார் விபத்து என பதிவு செய்த நிலையில், செவ்வாய்பேட்டை காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ரோட்டில் நடந்து சென்ற நபர் மீது மோதிய கார்; சிசிடிவி வீடியோ காட்சிகள்

அதில், சங்கர் நடந்து செல்வதும், அதிவேகமாக வந்த கார் ஒன்று சங்கரின் பின்னால் மோதி அவரை தூக்கி வீசுவதும், அப்பகுதியில் வேகமாக செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. பின்னர், சிசிடிவி காட்சிகள் மூலம், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதா அல்லது விபத்தால் நடந்ததா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web