சூப்பர்... இந்தியாவிலேயே முதன் முறையாக சுவாச நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!

 
இந்தியா

இந்தியாவில் சுவாச நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். “நபித்ரோமைசின்” என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து, சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறினார்.

மேலும், இந்த மருந்து குறிப்பாக புற்றுநோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இது முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும் என்பதால், மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றமாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியுள்ளது என்றும், இந்த புதிய கண்டுபிடிப்பு நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!