வீடியோவாக வரும் தமிழ்நாடு அரசின் ஈடில்லா திட்டங்கள்.. மக்களிடம் பேச போகும் முதல்வர்..!

 
முதல்வர்

திமுக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மாபெரும் நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் சாதனைத் திட்டங்கள்!- Dinamani

வீடியோ பதிவு மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த வசதியை முதல்வர் ஸ்டாலினே அறிமுகப்படுத்த உள்ளார். மக்களுக்கான திட்டங்களை மக்கள் முழுமையாக புரிந்துகொண்டு பயன்பெறும் வகையில் இத்திட்டங்கள் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.. அதேபோல் மக்களுக்கான சுகாதாரத் திட்டங்களும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. புதிய யுக்தியாக நாளிதழில் விளம்பரத்துடன் வைக்கப்பட்டுள்ள QR CODE ஐ கைபேசியில் ஸ்கேன் செய்து, தமிழக முதல்வர் அரசின் திட்டங்கள் குறித்து பேசும் வீடியோ பதிவை பார்க்கலாம். இந்த வீடியோ பதிவு ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டம்? - விரைவில் வெளியாகிறது  அறிவிப்பு!

மகளிருக்கு இலவச பயணம், மகளிர் உரிமை தொகை போல் தமிழக பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய விடியல் பயணம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் பேசும் காணொளியும் பார்க்கலாம். நாட்டிலேயே முதன்முறையாக முதல்வர் போன்ற அரசியல் கட்சி இந்த தொழில்நுட்பத்தில் உள்ள திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவது கூடுதல் அம்சம். மொத்தத்தில் தமிழக அரசின் திட்டங்களை காணொலி காட்சி மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web