சடலத்தை பாதுகாக்க புது திட்டம்.. எப்போ வேணாலும் சென்று பார்க்கலாம்.. ஆச்சர்ய கண்டுபிடிப்பு வைரல்!
ஒருவருக்கு மரணம் வந்தால் உடனடியாக புதைப்பது அல்லது எரிப்பது உலகம் முழுவதும் வழக்கமாக உள்ள நிலையில் ஜெர்மனியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தில் ஒருவர் இறந்தால், உடலை அடக்கம் செய்யாமலும், தகனம் செய்யாமலும் உடலைப் பாதுகாக்க இந்த அமைப்பு வழிவகை செய்கிறது.

முழு உடலையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ரூ.1.8 கோடியும், இறந்தவரின் மூளையை காப்பாற்ற ரூ.67.20 லட்சமும் செலவாகும் என்று அறிவித்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி செல்லப்பிராணிகளையும் பாதுகாக்கலாம் என அறிவித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களைப் பெறும் நிறுவனம் முதலில் திரவ நைட்ரஜன் நிரப்பப்பட்ட பெட்டியில் அவற்றைப் பாதுகாக்கிறது. அதன்பிறகு, மைனஸ் 198 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உடல் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், நம் முன்னோர்களின் உடலை எப்போது வேண்டுமானாலும் பார்க்க விரும்புவோர் இவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிலர் தங்கள் முன்னோர்களை பாதுகாக்க இந்த அமைப்பில் முன் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை இன்னும் சில வருடங்களில் உலகம் முழுவதும் பரவினால் இறந்தவர்களை புதைக்காமல், எரிக்காமல் பாதுகாப்பாக வைத்து, நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
