பெற்றோர்களே உஷார்.. கல்லூரி மாணவி ஷூவுக்குள் நல்ல பாம்பு!!

 
ஷூவுக்குள் நல்ல பாம்பு

இனி வரப்போவது மழைக்காலம். பொந்துகளுக்குள் வாழ்ந்து வரும் பூச்சி, பொட்டுகள் வெளிக்கிளம்பும். இதனால் வீட்டில் சிறு, சிறு பூச்சிகள் தலைக்காட்டத் தொடங்கும். புழு , பூச்சி, தவளை, பூரான் என சிறுசிறு பூச்சி, புழுக்கள் உலா வரும் காலம். இதனால் ஷூக்களை தட்டி விட்டு குழந்தைகளுக்கு போட்டுவிடவேண்டும். மூலை முடுக்குகளில் குழந்தைகள் நடமாடும் போது கவனம் அவசியம். கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன்.

பாம்பு

இவரது மகள் கடலூரில்  கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 3 நாட்களுக்கு தொடர்ந்து கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தார்.வெளியில் எங்குமே செல்லவில்லை. கல்லூரிதொடங்கவே ஷூ போடலாம் என கிளம்பி ஷூவை கையில் எடுக்கப் போகும் போது தான் பார்த்தார்.  வீட்டின் வெளியே கிடந்த அவரது 'ஷூ'வுக்குள் பாம்பு ஒன்று புகுந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார்.  வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாம்பை விரட்டி பார்த்தனர். முடியவில்லை.   அவர்கள் அளித்த தகவலின் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா வந்து, ஷூவில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

பாம்பு

இரண்டு அடி நீளமுடைய அந்த நல்லபாம்பை, பத்திரமாக மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டுவிட்டுவிட்டனர்.  ஷூவுக்குள் பாம்பு புகுவதை மாணவி பார்த்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து பாம்பு பிடி வீரர் கூறுகையில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பாம்பின் நடமாட்டம் இருந்தால் குழந்தைகள் இருந்தால் மிகுந்த   எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பொதுவாக குழந்தைகளின் ஷூ, பை முதலியவற்றை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து விட்டு, அவர்களிடம் தரலாம் எனக் கூறினார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web