மர்மமான முறையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. மருத்துவமனை விடுதியில் பரபரப்பு..!

 
கீதா

தனியார் மருத்துவமனை விடுதியின் குளியலறையில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் சேர்மன்துறை (வயது 42).   ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கீதா (19). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 முடித்துள்ளார். அதன் பிறகு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் படித்தார். தற்போது, ​​2ம் ஆண்டு, தேரகால்புதூரில் உள்ள மருத்துவமனையின் நர்சிங் மற்றும் பயிற்சி விடுதியில் படித்து வருகிறார்.

குமரியில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் மாணவி தற்கொலை; போலீஸ் வரும்  முன்பே தடயத்தை அழித்த பணியாளர்கள்

இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் பயிற்சி முடிந்து இரவு தனது அறைக்கு சென்றார். அப்போது அவர் தனது தந்தையிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற அவர், நேற்று காலை விடுதி குளியலறையில் துப்பட்டாவில் தூக்கில் பிணமாக பிணமாக கிடந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வடசேரி போலீசாருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Agastheeswaram, Kanniyakumari : அகஸ்தீஸ்வரம்: வடசேரி ஓட்டுபுற தெருவில்  கழிவு நீர் ஓடையில் ஆண் சடலம் மீட்பு | Public App

இதற்கிடையே மாணவி கீதாவின் தந்தை சேர்மன்துறை நாகர்கோவில் வந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீதா தற்கொலைக்கு காரணம்? உடனடியாகத் தெரியவில்லை. இதற்கிடையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கீதா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவர் செல்போனில் அதிகமாக பேசுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். நேற்று இரவு கீதா  ?  யாருடன் செல்போனில் பேசினார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

 

From around the web