பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி ஒன்றரை வயது குழந்தை பலி.... தாய் கண்முன்னே சோகம்!

 
ரக்‌ஷன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்   மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் வசித்து வருபவர்   சவுந்தர். 42 வயதாகும் இவர்   சிறுவியாபாரியாக முந்திரி வாங்கி விற்பனை செய்து வருகிறார்.  இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 5 வயதில் நவீன்குமார் ஒன்றரை வயதில் ரக்‌ஷன் என 2  ஆண் குழந்தைகள். இதில்  நவீன்குமார் காடாம்புலியூர்  தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வருகிறான். பள்ளிக்கு பள்ளி வேனில் செல்வது வழக்கம்.  வீட்டு வாசலில் வந்து பள்ளி வேன் நின்று நவீன்குமாரை ஏற்றிச்செல்லும்.   வழக்கம் போல்  நேற்று காலை 8.30 மணிக்கு  நவீன்குமாரை அழைத்து செல்வதற்காக வீட்டு வாசலில் வந்து  பள்ளி வேன் நின்றது.  

ரக்‌ஷன்

2 குழந்தைகளையும் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்த வசந்தி  நவீன்குமாரை வேனில் ஏற்றி விட்டார். அந்த சமயம் ஒன்றரை வயது குழந்தை  ரக்க்ஷன் வேனுக்கு அடியில் சென்று விளையாடத் தொடங்கிவிட்டான்.   வசந்தியும், வேன் டிரைவரும் இதை  கவனிக்கவேயில்லை. இதனால் வேன் புறப்பட்டு சென்ற போது நவீன்குமாருக்கு டாடா காட்டினார். அப்போது தான் ரக்‌ஷனின் அலறல் சத்தம் கேட்டது. வேனிற்கு அடியில் நின்றுகொண்டிருந்த ரக்‌ஷனின் தலைமீது  பள்ளி வேன் சக்கரம் ஏறி இறங்கியதில் தாய் கண்ணெதிரே  குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆம்புலன்ஸ்

தன் கண் எதிரே குழந்தை துடிதுடித்து இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வசந்தி  நெஞ்சில் அடித்து கதறி துடித்து அழுதார். இச்சம்பவம் காண்பவர்களை கண்ணீரில் கரைய வைத்தது.  இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பள்ளி வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . தாய் கண்ணெதிரில் குழந்தை தலை நசுங்கி உயிரிழந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web