வைரல் வீடியோ!! போட்டியில் காதலை வெளிப்படுத்திய தடகளவீரர்!!

 
 Dominic Cerny

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரியில் ஆகஸ்ட் 19முதல் நடைபெற்று வருகின்றன. இந்த சாம்பியன்ஷிப் தொடர்  ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.   இதில் 35 கிலோமீட்டர் நடைபோட்டியில் ஸ்லோவாக்கிய வீராங்கனையான ஹனா புர்சலோவா கலந்துகொண்டார்.


ஹனா புர்சலோவா பந்தய தூரத்தை கடந்தபோது, சக நாட்டு தடகள வீரரான டொமினிக் செர்னி, தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.  டொமினிக் சென்னி காதலை வெளிப்படுத்தியபோது, மகிழ்ச்சியடைந்த ஹனா புர்சலோவா, காதலை ஏற்றுக்கொண்டார். அப்போது டொமினிக், தான் வைத்திருந்த மோதிரத்தை ஹனா புர்சலோவாவுக்கு அணிவித்தார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து, இருவரும் ஒருவருக்கொருவர் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். ரசிகர்களிடையே  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web