வைரல் வீடியோ... பிரபல ரவுடி என்கவுண்ட்டர்..!!

 
விஷ்வா

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்  கிளாய் பகுதியில் வசித்து வரும்   பிரபல ரவுடி விஷ்வா.  இவருக்கு வயது 38.  இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உட்பட   10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  ஒரு வழக்கின் விசாரணைக்காக   காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் விஷ்வாவை தேடி வந்தனர். இந்நிலையில், சுங்குவார் சத்திரம் அருகே சோகண்டி பகுதியில் ரவுடி விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

அப்பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார் விஷ்வாவை பிடிக்க முயற்சித்த போது போலீசாரை தாக்கிவிட்டு   தப்பிக்க முயற்சித்தனர்.   தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி விஷ்வா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடி விஷ்வா தாக்கியதில், காவல் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டது.  தற்போது போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட விஷ்வா, தன்னை காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதாக உயர் அதிகாரிகளுக்கு   ஆகஸ்ட் மாதத்தில்   புகார் மனு அளித்திருந்தார். 

போலீஸ்


 என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்.ஐ. தயாளன் இருவருமே பொறுப்பு எனக்   குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக விஷ்வாவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.  இதனால் இந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web