விஜய்க்கு ரூ10 பரிசு... கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சவால்... !

 
கரூர்

இளைய தளபதி விஜய் நேற்று தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அதே நேரம் சில சர்ச்சையான பதிவுகளும் இடப்பட்டுள்ளன. இது குறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இடைக்கால பட்ஜெட்டில்  , ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எந்த இலவச அறிவிப்பும் இல்லை . இதனால் இது  நடுநிலையோடு போடப்பட்ட பட்ஜெட்டாக கொள்ளப்படுகிறது.  

கரூர்

மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகளை தமிழகத்தில் அனுமதித்ததால் தமிழ்நாடு உலகத்தின் குப்பை தொட்டியாக மாறிவிடும் அபாயம் உண்டு. இது  போன்ற வெளி நாட்டு திட்டங்களை தவிர்க்க வேண்டும். கள் இறக்க மின்சாரம் தேவையில்லை, வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடுகளினால் தீமைகள் தான் அதிகரிக்கும். ஆண்டிற்கு ரூ50000   கோடி ரூபாய் தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது.
 ஆனால், மது தயாரிக்க தேவையான மொலாசஸ் கரும்பு விவசாயிகளிடமிருந்து தான் பெறப்படுகிறது.இது குறித்து பொதுவெளியில்  பேச மறுக்கிறார்கள். மது விலை ஏற்றத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  பால் விலை ஏற்றினால் எவ்வளவு எதிர்ப்பு விவசாயிகளை புறக்கணிக்கிறார்கள். விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். யாரோ எழுதிய வசனத்தை ஒப்பிக்கிறார்.  அவர்  இடது காலை தூக்கினால்  பலர் உருண்டு போகிறார்கள், வலது காலை தூக்கினால்  வந்தவர்கள் எல்லாம் கீழே விழுகிறார்கள். அவர் திறமையை காட்ட வேண்டிய இடம் ஒலிம்பிக் மற்றும் சீனா எல்லை தான்.

விஜய்

கட்சி ஆரம்பிக்கும் முன்  நடிகர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கழகம் என்றால் சூதாடும் இடம் என்பது தான் பொருள். இதனைக் கூட அறிந்து கொள்ளாமல்  திருவள்ளுவருக்கு சிலையும்,  பேருந்தில் திருக்குறளும் எழுதி விடுகின்றனர். இது குறித்து ஏற்கனவே  கலைஞரிடம் கேட்ட போது மழுப்பலான பதிலை சொல்லி விட்டார்.  தற்போது புதிதாக அரசியலில் கால்பதித்திருக்கும் நடிகர்  கழகத்திற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். கள் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான் என்று  எங்களுடன் விவாதித்து, வெற்றி பெற்றால் அவருக்கு ரூ.10 கோடி பரிசு கொடுக்கப்படும். அவர் மக்கள் மனதில் இடம் பெற்று   2026   தேர்தலில் வெற்றி பெறலாம், முதல்வரும் ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web