பகீர் வீடியோ... மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய கணவன் !!

 
நிர்வாண ஊர்வலம்

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே நடைபெற்ற கலவரத்தில் இளம்பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் மற்றொரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்நகரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், ஒருவர் கணவனுக்கு தெரியாமல் மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிராம மக்கள் சந்தேகம் எழுப்பினர்.


இதன் அடிப்படையில் அந்த பெண் நேற்று மாமியாரின் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டார். அத்துடன் தாலிகட்டிய கணவனே அந்த பெண் கதற கதற உடைகளை அவிழ்த்து நிர்வாண ஊர்வலம் அழைத்து செல்கிறான்.  அந்த இளம்பெண் கதறி துடித்து அழுததை பற்றி கிராமமக்கள் கொஞ்சமும்  கவலைப்படாமல்  உறவினர்கள் பார்வையாளர்களாக அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தது கொடுமையின் உச்சம். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து அம்மாநில முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  


 

அத்துடன் இந்த கொடூர  சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார் எனவும்   கூறியுள்ளார்.ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா  " இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய  6  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய அவர்களைத் தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.  " எனக் கூறியுள்ளார்.இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web