காந்தி ஜெயந்தி.. கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு!
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அக்டோபர் திங்கள் 2ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அபூர்வ சூரிய ஒளி அண்ணல் காந்தியடிகளின் பீடத்தில் நண்பகல் 12 மணியளவில் விழும். இதனை காண உள்ளுர் மட்டுமல்லமால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள்.
அதனடிப்படையில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும் சூரிய ஒளியினை பார்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணல் காந்தியடிகள் , இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்திஜி அவர்களின் பெருமைகளையும், தியாகங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, அண்ணல் காந்தியடிகள் அவர்களுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும்” என்று கூறினார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
