தலைமை ஆசிரியர் தாக்கியதில் பறிப்போன கண் பார்வை.. கதறும் 5-ஆம் வகுப்பு மாணவி..!
பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதால் பள்ளி மாணவி கண்பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் குமார். கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் கங்கையம்மாள் (10). இவர் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பள்ளி வகுப்பறையில் இருந்தபோது பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகவேல் பாடம் நடத்தினார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர் திருமுருகவேல் கேள்வி எழுப்பினார். அப்போது கங்கையம்மாள் அருகில் இருந்த மாணவியிடம் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமுருகவேல் கங்கையம்மாள் மீது கட்டையை வீசினார்.
கங்கையம்மாளின் இடது கண்ணில் குச்சி விழுந்தது. மாணவி அலறினார். இதையடுத்து, அவரை மீட்டு அருகில் உள்ள தலைவாசல் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டாக்டர்கள் கண் பரிசோதனை செய்தனர். அப்போது மாணவிக்கு 95 சதவீதம் கண் பார்வை பறிபோனது தெரியவந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கங்கையம்மாளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் ஆகியோரிடம் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆத்தூர் ஆர்.டி.ஓ. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ரமேஷ் உறுதியளித்தார்.இதுகுறித்து தலைமை ஆசிரியர் திருமுருகவேல் கூறியுள்ளதாவது, தெரியாமல் தவறு நடந்துள்ளது.மாணவியின் மருத்துவ செலவை பார்த்துக்கொள்கிறேன், யாரோ தூண்டுதலின் பேரில் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க