சிவகங்கையில் பதற்றம்... பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து... 7 மாணவிகள் உட்பட 8 பேர் காயம்!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் எஸ்.புதூர் அருகே பள்ளி வேன் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் 7 மாணவிகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முசுண்டபட்டி, திருமலைக்குடி, குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள பில்லுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கு சொந்தமான மினி வேன் மூலமாக தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று வழக்கம் போல் திருமலைக்குடி அருகே பள்ளி மினி வேன் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த கார் வேன் மீது மோதியது. இதில் மினி வேன் ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் 7 மாணவிகள் காயமடைந்தனர்.

காயமடைந்வர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புழுதிபட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
