வீடியோ... ஸ்டியரிங் மேல் மட்டையான பள்ளி வேன் ஓட்டுனர்!! கதறிய மாணவர்கள்!!
கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது பிரபல தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். பலர் தங்களின் பிள்ளைகளை நேரிடையாக விட்டு அழைத்து செல்வர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரபலமான பள்ளி என்பதால் மற்ற மாணவர்களுக்காக பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கோவை புதூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அப்பள்ளியின் காண்ட்ராக்ட் வாகனங்கள் சென்று குழந்தைகளை ஏற்றி வருகின்றன.
இந்நிலையில் வடவள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம், குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் திடீரென நின்றுவிட்டது. பள்ளி மாணவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தூங்கிவிட்டார். இது குறித்து விசாரணை நடத்திய போது அந்த ஓட்டுநரின் பெயர் செந்தில் என்பதும், அவர் தலைக்கேறிய மது போதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் உள்ளார். இதனால் ஸ்டியரிங் மேலேயே படுத்து தூங்கிவிட்டார் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக அவர்கள் பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் உடனடியாக மாற்று வாகனத்தை அனுப்பியது. இதில் 12 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கே அழைத்துச் செல்லப்பட்டனர். மது போதையில் வாகனத்தை ஓட்டி அலட்சியப்படுத்திய ஓட்டுநர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!