பகீர்...காதலன் விபத்தில் பலியானதால் பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை... !

 
கிணற்றில் குதித்து தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம்   கல்லேரி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி, தேவா தம்பதி. இவர்கள்  கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுடைய மகள்   குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதில் சுப்பிரமணியின் தங்கை மகன் சிவா ஜனவரி 19ம் தேதி ஆந்திராவில்  விபத்தில் உயிரிழந்து விட்டான்.   ல் சிவாவும், 11ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்தனர்.  .

கிணறு

சிவா இறந்த சோகத்தில் மாணவி தனது தோழிகளிடம் சிவா இறந்துவிட்டார் நான் மட்டும் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என மனவருத்தத்தோடு பேசி வந்துள்ளார். ஜனவரி 24ம் தேதி மாணவியை காணவில்லை.  பல இடங்களில் பெற்றோர்களும், உறவினர்களும் தேடினர்.  எங்கு தேடியும் கிடைக்காததால்  சுப்பிரமணி தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.   ராஜசேகர் என்பவர் நிலத்தில் இருந்த  கிணற்றில் பெண் சடலம் மிதந்தது  தெரியவந்தது.  உடனடியாக  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். அது  சுப்பிரமணியின் மகள் தான் என்பது தெரிய வந்தது.

ஆம்புலன்ஸ்

போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து   காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த அத்தை மகன் விபத்தில் உயிரிழந்ததால் தானும்  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web