சிஏஏ குடியுரிமை பெற தனி இணையதளம் தொடக்கம்!

 
சிஏஏ


இந்தியாவில்  2019ல் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்  நாடுகளில் சிறுபான்மையாக வசித்து வரும்  இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் மத அடிப்படையிலான துன்புறுத்தல் அல்லது மத அடிப்படையிலான துன்புறுத்தல் குறித்த பயம் காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவில் தஞ்சம்புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு இந்த சட்ட விதிகள் உதவி செய்கின்றன.

போராட்டம்

இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளித்தும்   நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால்  இதுவரை  இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து  மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில்  இந்திய குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சிஏஏ

அதன்படி அதிகாரப்பூர்வ இணையதளமான  https:/indiancitizenshiponline.nic.in என்ற இணைய தளத்தை  மத்திய அரசு  தொடங்கி உள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குடியுரிமை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web