வாஷிங் மெஷினில் படமெடுத்து ஆடிய பாம்பு ... அதிர்ச்சி வீடியோ!

 
வாஷிங் மெஷினில் பாம்பு
 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில்  தளிபரம்பு என்னும் பகுதியில் வசித்து வந்தவர் 28 வயது ஜனார்த்தனன்.  இவர் டெக்னீசியனாக  பணிபுரிந்து  வருகிறார். இந்நிலையில் கடம்பேறி  பகுதியில் பாபு  வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு  ஜனார்த்தனை தனது வீட்டிற்கு அழைத்தார்.
ஜனார்த்தன் வாஷிங்மெஷினை சரி செய்வதற்காக திறந்து பார்த்தார்.

அப்போது உள்ளே ஏதோ இருப்பது போல தெரிந்தது. அந்த சமயத்தில் உள்ளே ஒரு பாம்பு இருப்பது தெரிய வந்தது. அதைப் பார்த்த பாபு மற்றும் ஜனார்த்தனன் உடனடியாக வனத்துறையினருக்கு இத்தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை மெதுவாக பிடித்து கொண்டு சென்றனர்.

வாஷிங்மெஷினில் பாம்பு

இது நாக பாம்பாக இருக்கலாம் எனவும், இது குழாய் வழியாக வாஷிங் மெஷினுக்குள் சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும் வாஷிங் மெஷினுக்குள் பாம்பு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!