பூட்டிய வீட்டில் பெரும் அதிர்ச்சி.. மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த கணவன், மனைவி..!

 
தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 3 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிகோட்டை: தளி BDO ஆபிசில் தொழிற்சாலைக்கு சான்றிதழ் வழங்க ₹30,000  லஞ்சம் வாங்கிய BDO உட்பட மூவரை பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்|Inshorts

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெச்எம்டி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த வம்சிதர் பசுபிலடி (50) பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தினவம்சி (45). இருவரும் ஓசூர் அருகே உள்ள தளியில் ஜெபராணி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இருவருக்கும் குழந்தை இல்லை என்றும், தற்போது வம்சிதர் எஸ்டேட்டில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவர்களது வீடு பூட்டியே கிடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மாலை வீட்டின் ஜன்னல் வழியாகவும், தபால் கதவு வழியாகவும் கடும் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி வீட்டின் உரிமையாளர் ஜெபராணி தளி காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தனர்.

Denkanikottai, Krishnagiri : தேன்கனிகோட்டை: கெம்பெத்தப்பள்ளியில் தீராத  வயிற்றுவலிக்கு விவசாயி விஷம்குடித்து தற்கொலை!!தளி போலிசார் விசாரணை!! |  Public App

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும், கடந்த 3 நாட்களாக வீட்டுக்குள் சடலங்கள் கிடப்பதும், அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசுவதும் தெரியவந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web