லீவு முடிந்து திரும்ப வசதியாக நெல்லை - சென்னை இடையே 22ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்.. முன்பதிவு தொடக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் மீண்டும் தலைநகரை நோக்கி திரும்புவதற்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது.

நெல்லை–சென்னை (எழும்பூர்) இடையே அக்டோபர் 22ம் தேதி இரவு 11.55 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை (எழும்பூர்) வந்து சேரும்.
இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வழியாகச் சென்று எழும்பூரை அடையும்.

மறுமார்க்கமாக இந்த ரெயில் வியாழக்கிழமை (23ஆம் தேதி) மதியம் 12.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.15 மணிக்கு நெல்லை வந்து சேரும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால், பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
