பெரும் சோகம்... பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவன் பலி... கதறித் துடித்த பெற்றோர்....!!

 
வில்பர்ட்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தியை  மேம்படுத்தும் வகையில் சத்துமாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம்  செம்பட்டு அடுத்த திருவளர்ச்சிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  ஜோசப் காமராஜ்.

மாத்திரை

இவரது மகன் வில்பர்ட். இவர்  திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளில் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாணவனுக்கு பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசிரியர்கள் வழங்கினர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட்டது.  ஆனால் அம்மாணவனோ டிசம்பர் 1ம் தேதி பள்ளியில் இருக்கும் போதே ஒரே நேரத்தில் 10  மாத்திரைகளை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்
 வீடு திரும்பியதும் அந்த மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  அம்மாணவனின் பெற்றோர்  உடனடியாக  மகனை  திருச்சி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web