அம்மா , அப்பா என்ன மன்னிச்சிடுங்க... JEE பயத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை... !

 
நிஹாரிகா

இன்றைய இளைய தலைமுறையினர் எடுத்ததற்கெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். நடப்பவைகளை எதிர்கொள்ள முடியாமல் பல விபரீதமுடிவுகளை எடுத்து விடுகின்றனர்.  இதனால் பெற்றோர்களும், உறவினர்களும் பெரும் ஏமாற்றமும் கவலையும் அடைவார்கள் என்பதை சிந்தித்து பார்ப்பதே இல்லை.  ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் போர்கெடா பகுதியில் வசித்து வருபவர்   18 வயதான நிஹாரிகா சிங். இவர்  ஜேஇஇ தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென கடிதம் எழுதி வைத்து விட்டு   வீட்டில் தூக்கில் தொங்கிவிட்டார். உடனடியாக  வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

தற்கொலை

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.  இந்நிலையில் மாணவி, தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதிய , உயிரை மாய்த்துக் கொண்டதற்கான  கடிதமும் சிக்கியுள்ளது. அதில்   “அப்பா, அம்மா என்னால் ஜேஇஇ தேர்வினை எழுத முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் தோல்வியுற்றவள், நான் மிக மோசமான மகள். அம்மா, அப்பா மன்னித்து விடுங்கள். இதுதான் எனக்கு கடைசி வாய்ப்பு” என எழுதியுள்ளார். மேலும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் தேர்வு குறித்து பதற்றமாக இருந்து வந்ததாக பெற்றோர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.  

ஆம்புலன்ஸ்


இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர்”  நிஹாரிகா  ஜனவரி இறுதியில் நடைபெற இருந்த ஜேஇஇ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அவரது தந்தை வங்கி   காவலாளி. இவருக்கு 3 மகள்கள் இதில்  நிஹாரிகா தான் மூத்தவர்.நீண்ட நேரமாக  அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் குடும்ப உறுப்பினர்கள்   கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.  ஏற்கனவே  உத்திரப்பிரதேச  மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது ஜைதி  ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில்  தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web