சென்னை வந்த விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்... 67 பேர் உயிர் தப்பினர்!
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பேர் உயிர் தப்பினர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தூத்துக்குடியில் இருந்து 67 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்றது. நேற்று மதியம் 3.35 மணிக்கு சென்னையில் தரை இறங்கியபோது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்டு விமானி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் பத்திரமாக தரை இறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் தரை இறங்கியதும் விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலை பழுது பார்க்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டு கண்ணாடியை மாற்றும் பணி நடந்து வருகிறது.

விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதேபோல் மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்திலும் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
