பரபரப்பு... பிரபல நகைக்கடையில் திடீர் தீவிபத்து.. தீயில் சிக்கி ஒருவர் பலி... !!

 
ஜானகி ஜுவல்லர்ஸ்

மதுரை மாவட்டம்  தெற்கு மாசி வீதியில்  ஜானகி ஜுவல்லர்ஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி . இவர்   நேற்று இரவு வழக்கம் போல் கடையில் இருந்து விற்பனை  செய்து கொண்டிருந்தார். அப்போது   திடீரென நகைக்கடையின் முதல் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தீவிபத்து

இதனை தொடர்ந்து உரிமையாளரின் மருமகனான மோதிலால் தீயை அணைப்பதற்காக ஓடினார். அவர்  முதல் தளத்திற்கு சென்று தீயை அணைப்பதில் ஈடுபட்டிருந்தார் . இந்நிலையில், அங்கு  எரிந்த  தீயில்  அவர் சிக்கிக் கொண்டார். இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த   தீயணைப்பு துறையினர்  உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆம்புலன்ஸ்

அத்துடன்  தீயில் சிக்கிக்கொண்ட மோதிலாலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.  உடனடியாக மோதிலால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடையில் திடீர் தீவிபத்து சுற்றுவட்டாரத்தில் மக்களிடையே பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web