செம கெத்து... சிங்கப்பூரை ஆளப்போகும் தமிழன்!! முதல்வர் வாழ்த்து!!

 
தர்மன் சண்முக சுந்தரம்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர்   ஹலிமா யாகூப். இவரின்  பதவிக்காலம் செப்டம்பர்13ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து  நேற்று செப்டம்பர் 1ம் தேதி  புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல்   நடைபெற்றது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
அதன்ப்டி   கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார்.இவர்   இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடன் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

அன்னாசிபழ ஆடை


 நேற்று  வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்றிரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்துள்ளனர்.   கேரளாவை சேர்ந்த எஸ்.ஆர் நாதன், தமிழகத்தை  பூர்வீகமாகக் கொண்ட செல்லப்பன் ராமநாதன்  இருவரை தொடர்ந்து தற்போது  தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

ஸ்டாலின் தர்மன் சண்முக சுந்தரம்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக உட்லண்ட்ஸ் ரிங் பிரைமரி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பிரதிபலிக்கும்  வகையில்  அன்னாசிப்பழ உருவங்கள் கொண்ட ஆடையை ஒரு பெண்மணி அணிந்து வந்தார்.இந்த பெண்மணியை தேர்தல் அலுவலர்கள் திருப்பி அனுப்பிய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது அவர் உடையை மாற்றி வந்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் அதிபராக தேர்வாகியுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர்   ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தம்முடைய வாழ்த்துச்செய்தியில் ''சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது.தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்.'' என பதிவிட்டுள்ளார்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web