நடுவானில் தொழில்நுட்ப கோளாறு... அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

 
விமானம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம்

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நேற்று புறப்பட்ட அந்த விமானம், வழக்கம்போல் பறந்து கொண்டிருந்தபோது திடீரென சில உபகரணங்களில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதை விமானிகள் கவனித்தனர். உடனே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் மங்கோலியா தலைநகர் உலான்பாடரில் தரையிறக்கப்பட்டது.

விமானம் ஸ்பைஸ்ஜெட்

விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், அனைத்து பயணிகளும் நலமாக உள்ளனர் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அங்கு அனுப்பப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகிறது. விமானம் மீண்டும் டெல்லி நோக்கி புறப்படும் நேரம் குறித்து ஏர் இந்தியா விரைவில் அறிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?