70 பேருடன் சென்ற சொகுசு பேருந்தில் பயங்கர தீ விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

 
பேருந்து

டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நோக்கி புறப்பட்ட சொகுசு இரட்டைஅடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்து, ஆக்ரா-லக்னோ தேசிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்த 70 பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.முன்தினம் இரவு டெல்லியில் இருந்து பயணத்தைத் தொடங்கிய பேருந்து, அதிகாலை நேரத்தில் உ.பி. தலைநகர் லக்னோவுக்கு அருகே உள்ள ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையின் ரேவ்ரி பகுதியை கடந்த போது, பேருந்தின் ஒரு டயரில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை 500 மீட்டர் தூரத்தில் உள்ள சுங்கச்சாவடிக்கு முன்பாக நிறுத்தி, பயணிகளை எழுப்பி அவசரமாக வெளியேறச் செய்தார். சில நிமிடங்களுக்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பரவிய வேகம் காரணமாக பேருந்து முழுவதும் சாம்பலானது. எனினும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில், டயர் பகுதியிலிருந்து தீ பரவித் தொடங்கியிருக்கலாம் என கூறியுள்ளனர். பின்னர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பேருந்து அகற்றப்பட்டு சுமூகப்படுத்தப்பட்டது.சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து தீ விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் இன்னும் மக்கள் நினைவில் இருக்கும் நிலையில், மீண்டும் இப்படியான விபத்து நடந்து அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!