வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கர்ப்பிணி பெண்.. கதறும் உறவினர்கள்..!

 
சௌமியா

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள பொம்மேனஹள்ளியைச் சேர்ந்தவர் சௌமியா (22). இவருக்கும் பிரசாத் (40) என்பவருக்கும் திருமணம் நடந்தது. தன்னை விட 18 வயது மூத்தவரை திருமணம் செய்ததாக சௌமியா  மன வேதனையில் இருந்துதுள்ளார். இதனால் பிரசாத்துக்கும், சௌமியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தினர் முன்னிலையில் நிம்மதியாக வாழ பஞ்சாயத்து செய்யப்பட்டுள்ளது.

தும்கூர்

இந்நிலையில், சௌமியா இன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மூன்று மாத கர்ப்பிணியான எங்கள் மகள் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக சௌமியாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ತಿಪಟೂರು: ನೊಣವಿನಕೆರೆ ಹೋಬಳಿ ನೆಲ್ಲಿಕೆರೆ ಗ್ರಾಮದ ಮಹಿಳೆ ನಾಪತ್ತೆ.|Inshorts
சௌமியாவின் கணவர் பிரசாத் மற்றும் மாமனார் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் நொன்னவினகெரே காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சௌமியா எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web