சாலையில் சென்ற லாரியிலிருந்து பிரிந்து ஓடிய டயர்... அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!!

 
லாரி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த  லாரியிலிருந்து டயர் ஒன்று  தனியாக கழன்று விட்டது. இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.  ஸ்ரீபெரும்புதூரிலிருந்து குஜராத் நோக்கி கிளம்பிய லாரி  நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில்  சென்று கொண்டிருந்தது. லாரியின் இடதுபக்க டயர் ஒன்று திடீர் என தனியாக கழன்று ஓடியதால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் 100 மீட்டர் தொலைவில் லாரியை லாவகமாக நிறுத்தி விட்டார்.  

விபத்து


கழன்ற உடனே அதிவேகமாக ஓடிய டயர் சாலை ஓர நடைமேடையில் மோதி பறந்தது. அதன்பிறகு சமயோசிதமாக லாரியை நிறுத்த முயன்ற சமயத்தில்  விபத்து ஏற்பட இருந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக  2 பெண்கள் உட்பட 3 பேர் நூலிழையில் உயிர்தப்பினர். நடைமேடையில் மோதி பறந்து சென்ற டயர்  அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதி கீழே விழுந்தது.

போலீஸ்

இதனால் அந்த பக்கமாக  கடை வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அலறியடித்துக் கொண்டு  ஓடினர். தகவலின் பேரில்  நிகழ்விடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.   

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web