உளுந்தூர்பேட்டையில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து... 15 பேர் படுகாயம்!
உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நின்ற தனியார் சொகுசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்ட நிலையில், 15 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்து இரண்டு கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.*
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
