அதிர்ச்சி வீடியோ.. டேக் ஆப் ஆன விமானத்தில் இருந்து கீழே விழுந்த டயர்!

 
 சான்பிரான்சிஸ்கோ விமானம்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 235 பயணிகளும் 14 ஊழியர்களும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டதும், அதன் டயர் ஒன்று கழன்று கீழே விழுந்தது. விமான நிலைய ஊழியர்களின் வாகன நிறுத்ததின் பகுதியில் டயர் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


அங்கிருந்த காரின் பின்பக்க கண்ணாடி மீது டயர் மோதியது. பின்னர் அருகில் இருந்த வேலியில் மோதியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையில், 6 டயர்களில் ஒரு டயர் இல்லாமல் தொடர்ந்து பறந்த விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதுவும் விமானம் ஓடுபாதையில் பாதியிலேயே நின்றது.

பின்னர் அது இழுத்துச் செல்லப்பட்டது. பயணிகளுக்கு மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தின் டயர் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விமானம் 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், சேதமடைந்த டயர்கள் அல்லது சில டயர்கள் காணாமல் போனால் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!