கனமழையில்... வெள்ளத்தில் அடித்துச் சென்ற வேன்!
Oct 20, 2025, 10:30 IST
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட நெடுங்கண்டம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுத்தது.கல்லார் ஆற்றில் தண்ணீர் திடீரென பெருக்கெடுத்து ஓடியதால், கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேன் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. சம்பவம் நேரத்தில் வேனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தப்பியதாக தகவல்.

பல மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட அந்த வேன், தொடர்ந்த பெருக்கால் தலைகீழாக மாறி கரைஒதுங்கிய நிலையில் பின்னர் காணப்பட்டது.

நெடுங்கண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
