”மன்னிச்சுடுங்க டாடி.. உங்கள ஹர்ட் பண்ணிட்டேன்”.. கதறும் ராஜ்கிரண் மகள்.. வீடியோ வைரல்..!

 
ராஜ்கிரண் வளர்ப்பு மகள்

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. 2022ல் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். நடிகர் முனிஷ்ராஜா சன் தொலைக்காட்சியில் ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானார். இது தவிர பெரிய திரை படங்களிலும் நடித்துள்ளார்.முனிஷ் ராஜா மற்றும் பிரியா இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்தனர்.இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டபோது ராஜ்கிரண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தப் பிரச்னையில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. நடிகர் ராஜ்கிரண் சமூக வலைதள பக்கத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதில் பிரியா, தான் தனது வளர்ப்பு மகள் என்றும், தன்னை அசிங்கப்படுத்தவே திருமணம் செய்து கொண்டதாகவும், இனிமேல் தன் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் கடுமையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜ்கிரணின் மகள் பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் முனிஷ்ராஜா என்பவரை 2022ல் திருமணம் செய்துகொண்டேன்.எங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது.நாங்கள் பிரிந்தோம். நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகின்றன. இந்த திருமணத்தால் என்னை வளர்த்தவர்களை காயப்படுத்தி விட்டேன். ஆனாலும், அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினர். அதற்காக அவர்களுக்கு நன்றி. டாடி உங்களை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web