பரபரப்பு... போலீஸ் வேன் அடுத்தடுத்து 6 இருசக்கர வாகனங்கள் மீது மோதி பெண் உடல் நசுங்கி பலி!

 
விபத்து

காவல்துறை வாகனம் கண்மண் தெரியாமல் ஓடியதில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். திருச்சி மாவட்டம் தொட்டியம்   சீலைபிள்ளையார் புதூர் மாரியம்மன் கோவில் தெருவில்  காவல்துறையின் வாகனம் ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.  திடீரென ஏற்பட்ட கவனக்குறைவால் காவலர் ஓட்டி சென்ற வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து  6  இரு சக்கர வாகனங்களில் மோதியதில்  பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.

விபத்து

அத்துடன் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவல்துறை வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க  அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறை வாகனத்தை தலைகீழாக கவிழ்த்து உயிரிழந்தவர் காயமடைந்தவர்கள் உடலை மீட்டனர்.  

ஆம்புலன்ஸ்


காவல்துறையின் வாகனத்தை ஓட்டிய காவலர் போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு   அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன்  வஜ்ரா வாகனங்கள்  பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web