காதலுக்கு வயசில்லை... படுக்கையில் இருந்த 65 வயதுடையவரைத் தேடி வந்து திருமணம் செய்த பெண்!

 
திருமணம்
 

காதலுக்கு வயசில்லை என்றும், வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக, காயமடைந்து மருத்துவமனையில் படுக்கையில் இருந்த 65 வயது தொழிலாளியை தேடி வந்து 55 வயது பெண் திருமணம் செய்த சம்பவம் கேரளாவில் பலரது இதயத்தையும் தொட்டுள்ளது.

ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பகுதியை சேர்ந்த ரமேசன் (65) தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். திருமணமானவர் என்றாலும் சில வருடங்களாக தனியாகவே வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓமனா (55) என்பவரும் மணவாழ்க்கை முறிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

இருவரும் ஒரே பகுதியில் இருப்பதால் பழக்கம் ஏற்பட்டது. பின்பு நட்பு நெருக்கமாகி, முதுமை வயதிலும் ஒருவரை ஒருவர் விரும்பும் காதலாக மாறியது. தங்களது உறவினர்களிடம் இதைத் தெரிவிக்க, அவர்கள் இதனை மனமார ஏற்றுக்கொண்டனர். “இன்னும் வாழ்நாள் இனிமையாய் இருக்கட்டுமே” என ஆசீர்வதித்தும் இருந்தனர்.

திருமணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றபோது, திடீரென ரமேசன் சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காலில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ரமேசனும் ஓமனாவும் திருமண நாளை மாற்றாமல், அதே தேதியில் வாழ்வை ஒன்றிணைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து ரமேசனை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு வந்து, படுக்கையில் அமர்த்தினர். மணப்பெண் ஓமனா மணக்கோலத்தில் உறவினர்களுடன் வந்து, அவரின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டார். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மலர் தூவி வாழ்த்தினர்.

மணமகனாக இருந்தபடியே சிகிச்சை பெறும் ரமேசனை, திருமணத்துக்குப் பிறகு மனைவியாக ஆன ஓமனா அன்புடன் கவனித்து வருகிறார். இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. ஏ.எம். ஆரிப் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.முதுமை காலத்திலும் காதலும் வாழ்க்கையும் புதிதாய் மலர முடியும் என்பதற்கான உதாரணமாக இந்த திருமணம் கேரளா முழுவதும் பேசப்படும் செய்தியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!