ச்சீ.. தூ.. நடத்துனர் மீது எச்சில் துப்பி அட்டகாசம்.. பேருந்தில் குடிபோதையில் தள்ளாடிய இளம்பெண்..!

 
தெலுங்கானா  பேருந்து

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குடிபோதையில் கண்டக்டரை தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஹயாத் நகர் பஸ் டெப்போவில் இருந்து புறப்பட்ட பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த இளம்பெண் ஒருவர் 10 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
சில்லறை இருக்கிறதா என்று கேட்ட கண்டக்டர், 490 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.இதற்கிடையில், ஆத்திரமடைந்த பெண் கண்டக்டரை திட்டிக்கொண்டே அவரை தாக்கினார். நடத்துனர் அதிகம் எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருந்த நிலையில் இளம்பெண் அவரை உதைத்துள்ளார்.

விடியும் முன் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று அநாகரீகமாக திட்டியும் மிரட்டியும் அந்தப் பெண் அவர் மீது எச்சில் துப்பி அவமானப்படுத்தினாள். ஓடும் பேருந்தில் கண்டக்டரை இளம்பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web