பகீர்... மார்பை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்த பெண்... லீக்கான வீடியோ!

பிரபலங்கள் , பணம் படைத்தவர்கள் பலரும் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதுண்டு. அந்த வகையில் சீனாவில் வசித்து வரும் கோவா என்ற பெண்மணிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனால் கோவா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கோவா புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் என்னுடைய தனி உரிமையை மீறி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்வதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. நிச்சயம் அந்த வீடியோவை அதுவும் ஆப்ரேஷன் தியேட்டரில் வைத்து எடுத்திருக்க வேண்டும். எனில் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் தான் எடுத்திருக்க வேண்டும். எனவே இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் என்னிடம் மன்னிப்பு கேட்டு அதற்குரிய நிவாரணத்தையும் வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு விட்டன. அந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க இயலாது என கைவிரித்துவிட்டது. மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. ’
சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்வதாக கூறியுள்ளது. இருப்பினும் கோவா மருத்துவமனையில் உள்ளவர்களை தவிர யாரும் இந்த வேலையை செய்திருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இறுதியில் மருத்துவமனை நிர்வாகம் வீடியோ எடுத்தவர் தற்போது வேலையை விட்டு நின்று விட்டதாகவும் அவரின் தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும் ஒப்புக்கொண்டது. இச்சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து தனக்கு நீதி பெற்று தர வேண்டும் கோவா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா