கல்யாணத்தை நிறுத்தணுமா? ரூ.47,000 கட்டணத்தில் திருமணத்தை நிறுத்தும் வேலை செய்யும் இளைஞர்!

 
திருமணம்
 

ஸ்பெயினில் உள்ள எர்னஸ்டோ ரெய்னாரெஸ் வரேயா என்ற நபர், திருமணத்தை ஆட்சேபித்து திருமணத்தை நிறுத்துவதற்காக பணம் பெறும் தனித்துவமான வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது வைரலாகி வருகிறது. அவர் € 500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47,000) வசூலிக்கிறார். வழக்கமாக திருமணம் செய்து கொள்ளத் தயங்கும் ஆனால் அதை எப்படி நிறுத்துவது என்று தெரியாத மணப்பெண்களால் தான் வேலைக்கு அமர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

திருமணம் கல்யாணம் கும்பம்

திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் அவர், திருமண விழாவில் குறுக்கிட்டு, மணமகளின் உண்மையான காதலன் தான் என்று கூறிவிட்டு அவளுடன் இப்போதே தான் ஓடிச் செல்லவும் தயார் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்துவதாக விளக்கினார்.

ஆரம்பத்தில் நகைச்சுவையாகக் கருதப்பட்ட வரேயாவின் இந்த விளம்பரம் ஒரு கட்டத்தில்  உண்மையான வாடிக்கையாளர்களை ஈர்த்த நிலையில், இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை பல மணப்பெண்கள் அவரை தங்களது திருமணத்தை நிறுத்துவதற்கு முன்பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமணத்தை நிறுத்துவதற்கு ரூ.47,000 வசூலிக்கிறார். 

“உனக்கு உன் திருமணத்திற்கு பார்த்திருக்கும் மணமகன் மீது சந்தேகம் இருந்தால் அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றால்,  எப்படி திருமணத்திற்கு மறுப்பது என்று தெரியாவிட்டால், கவலைப்படாதே, உன் திருமணத்தை நான் எதிர்க்கிறேன். அதை நிறுத்துவதற்கு நான் வழி சொல்கிறேன். நீங்கள் எனக்கு உங்கள் திருமணம் நடைபெற உள்ள நேரம், இடம் மற்றும் தேதியைக் கூற வேண்டும்” என்று ஸ்பானிய செய்தி நிறுவனமான ஆண்டெனா 3 மூலம் விளம்பரப்படுத்துகிறார். 

திருமண விழாவின் நடுவில் வரேயா தோன்றி, மணமகளின் உண்மையான காதலன் நான். என் காதலுக்கு பதில் சொல்லுங்கள் எனக் கூறுவார் என்றும், மணமகளை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புவார் என்றும் விளம்பர நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அதே சமயம் அவரது சேவைகள் கூடுதல் கட்டணங்களையும் தெரிவித்துள்ளது. மணமகளின் உறவினர்களோ அல்லது வேறு யாரேனும் அவரை அறைந்தால், ஒரு அறைக்கு €50 (ரூ. 4,700) வசூலிக்கிறார்.  திருமணவிழாவிற்கு இடையூறு விளைவித்ததற்காக குடும்ப உறுப்பினர்கள் அவரை அறையவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவரது வணிகம் முதன்மையாக மணப்பெண்களுக்கு மட்டுமே உதவுகிறது என்றாலும், திருமணத்தை நிறுத்துவதற்கு சங்கடப்படும் மணமகன்களுக்கும் இது கிடைக்கும் என்று வாரே தெளிவுபடுத்தி உள்ளார். 

அவரது சேவை இலகுவானதாக இருந்த போதிலும், தங்கள் திருமணத்தை பிடிக்காவிட்டால் இலவசமாகவே நிறுத்த வழிகள் இருக்கும் போது, ​​​​ஒருவருக்கு பணம் கொடுத்து நிறுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருந்தபோதிலும், நகைச்சுவையாக ஆரம்பித்தது தேவைப்படுபவர்களுக்கான உண்மையான சேவையாக மாறிவிட்டது என்று வரேயா தனது வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை