அட்ரா சக்க.. கீரை விற்க ஆடி காரில் வந்த இளம் விவசாயி.. மாஸ் வீடியோ!!

 
சுஜீத்

 பெரும் பணக்காரர்கள் , அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் விலை உயர்ந்த கார்களில் செல்லும் போது நமக்கு வியப்பு ஏற்படுவதில்லை. அதே ஒரு விவசாயியிடம் ஆடி கார் இருப்பதை பார்த்தாலே அதிர்ந்து விடுவோம். அதே தான். ஆடி காரில் வந்து கீரை வியாபாரம் செய்யும் விவசாயி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கேரளாவில் வசித்து வரும்   இளம் விவசாயி சுஜித்.

இவர்   சாலையோர சந்தையில் காய்கறிகளை விற்க ஆடி ஏ4 சொகுசு காரில் வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.  சுஜித்  , வயலில் பயிர்களை விளைவித்து, அவற்றை ஆட்டோரிக்க்ஷாவில் ஏற்றிவிடுகிறார்.  காய்கறிகளை விற்கும் முன் பிளாஸ்டிக் ஷீட் அமைத்து அதில் காய்கறிகளை அடுக்கி வைக்கிறார். அந்த பொருட்களை விற்றுவிட்டு அவர் தனது ஆடம்பரமான காரில் ஏறி புறப்பட்டு செல்கிறார். 

சுஜித்


சுஜித் இந்த ஆடி காரை செகண்ட் ஹாண்டில் வாங்கியதாக கூறுகிறார். இந்த கார்   இது 2.0-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 320 Nm மற்றும் 204 குதிரைத்திறன் கொண்டது.  . ஆடி A4 7.1 வினாடிகளுக்குள் 100 கிமீ/மணிக்கு வேகத்தில் பயணிக்கலாம்.  புதிய ஆடி கார் ரூ.44 லட்சம் முதல் ரூ.52 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web