உன்ன கொன்னுடுவேன்... இளம்பெண் ஓடும் பேருந்தில் நடத்துனரிடம் ரகளை... அதிர்ச்சி வீடியோ...!

 
குடிபோதையில் ரகளை

இந்தியாவின் பல பகுதிகளில் மேற்கத்திய கலாச்சாரம் படுமோசமாக பரவி வருகிறது. குடிபோதையில் இருப்பவர்கள் எல்லாரும் தூங்கிய பிறகு பயந்த வந்த காலம் மலையேறிவிட்டது. சோஷியல் டிரிங்கிங்க் என்ற அளவுக்கு வந்த போதே பாரம்பரியம் கலாச்சாரம் சீரழிய தொடங்கி விட்டது. தற்போது ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் இந்த கோதாவில் இறங்கி அதிலும்  பொது இடங்களிலும் படுமோசமாக நடந்து வருவது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குடிபோதையில் கண்டக்டரை தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஹயாத் நகர் பஸ் டெப்போவில் இருந்து புறப்பட்ட பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த இளம்பெண் ஒருவர் 10 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார்.





சில்லறை இருக்கிறதா என்று கேட்ட கண்டக்டர், 490 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.இதற்கிடையில், ஆத்திரமடைந்த பெண் கண்டக்டரை திட்டிக்கொண்டே அவரை தாக்கினார். நடத்துனர் அதிகம் எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருந்த நிலையில் இளம்பெண் அவரை உதைத்துள்ளார்.

விடியும் முன் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று அநாகரீகமாக திட்டியும் மிரட்டியும் அந்தப் பெண் அவர் மீது எச்சில் துப்பி அவமானப்படுத்தினாள். ஓடும் பேருந்தில் கண்டக்டரை இளம்பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web