மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி!! துணி காயவைக்கும் போது பரிதாபம்!!

 
கொடியில் துணி

ஈரோடு மாவட்டம் தாளவாடி   பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர்   நாராயணன். இவர்   கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் 26 வயது  ஜோதி .  ஜோதிக்கும், சிவராஜுக்கும்   6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து  இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்து வருகிறது.   கடந்த சில மாதங்களாக   கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

மின்சாரம்

கடந்த 8 மாதங்களாக ஜோதி கணவரை பிரிந்து   தனது மகளுடன், தந்தையின் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.   நேற்று ஜோதி வழக்கம் போல்  துணிகளை துவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த கம்பியில் துணிகளை காய வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொடி கம்பியில்  மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ஜோதி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.    

ஜோதி

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜோதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web