சாவிய காணோம்... வீட்டு ஜன்னல் வழியாக தலைகீழாக தொங்கும் இளம்பெண் ... வைரல் வீடியோ... !

 
லிசா

வீட்டு சாவி, பைக் சாவி, கார் சாவிகளை எங்கேயாவது வைத்து விட்டு தேடும் அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. வைத்த இடத்தை மறந்துவிட்டு எல்லா இடத்திலும் தேடி சலித்து அக்கடா என உட்காரும் போது அங்கேயே தான் சாவி இருந்திருக்கும். இதே போல் ஒரு சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் சாவியை தொலைத்து விட்டு அதை தேடும் படலத்தை தொடங்கினார்.  இது குறித்த நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் இங்கிலாந்தில்  லண்டன் நகரில் வசித்து வரும் இளம்பெண் தன்வீட்டு சாவியை எடுப்பதற்காக  ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கிறார். அப்போது  ஜன்னலில் தலைகீழாக தொங்கிய நிலையில் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவம் 2023 ஜூனில் நடந்ததாக அவரது சகோதரி இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.  
அவரது கூற்றுப்படி இந்த வீடியோவில் லிசா ரோலேண்ட் என்ற அந்த பெண், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.  வீட்டிற்கு திரும்பி வந்தபோது பையில் சாவியை காணவில்லை. அப்போது, வீட்டின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டி சென்றது  நினைவுக்கு வந்தது. எப்படி உள்ளே போவது என்று யோசித்த லிசா, வீட்டின் ஜன்னல் திறந்திருந்ததை பார்த்தார்.  அந்த வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று சாவியை எடுக்க திட்டமிட்டார். இதற்காக உதவிக்கு தனது சகோதரியையும் அழைத்துக்கொண்டார்.  சகோதரியின் உதவியால் ஜன்னல் வழியாக ஏறிய லிசா, ஜன்னலின் மேற்பகுதியில் சிக்கி உட்பக்கமாக இறங்க முடியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் இருந்தார்.  

லிசா

உடல் முழுவதும் ஜன்னல் வழியாக வீட்டின்  உட்பக்கமாக தொங்கிக்கொண்டிருக்க, கால் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. இதனால் அவரை வெளியே கொண்டுவரவும் முடியவில்லை. சிக்கிக் கொண்டதால் உள்ளேயும் இறங்க முடியவில்லை.  அவர் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த நிலையைப் பார்த்த அவரது சகோதரிக்கு சிரிப்போ சிரிப்பு தான்.  பெரும் முயற்சிக்கு பின்னர்  கைகளை ஊன்றி குட்டிக்கரணம் அடித்து ஒருவழியாக வீட்டிற்குள் சென்றுவிட்டார் .  மிகவும் வேடிக்கையான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட தகவலே தோழி ஒருவர் மூலமாகத் தான் லிசாவுக்கே தெரியவந்தது.  ஒரு தடவை பட்ட அனுபவத்தில் இப்போதெல்லாம்  வீட்டின் சாவியை கழுத்திலேயே செயினுடன் மாட்டி தொங்க விட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web