குடும்பத்தகராறு ... தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
அஸ்வினி

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேரி பகுதியில் வசித்து வருபவர்  பிரதீபன். இவருடைய மனைவி ஓமனா. இவர்களின் மகள் 25 வயது அஸ்வினி.  அஸ்வினிக்கும்  கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபினுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.  கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் விபின் தாக்கியதில் அஸ்வினி காதில் காயம் ஏற்பட்டு  அங்குள்ள அரசு மருத்துவமனையில் அஸ்வினி சிகிச்சை பெற்றார்.

தூக்கிட்டு தற்கொலை

இதன் பிறகு  அஸ்வினி கோபித்துக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.  ஜூலை 15ம் தேதி விபினின் சகோதரி திருமணம் நடந்த நிலையில் அஸ்வினி அதில் கலந்து கொண்டு விட்டு தாய் வீட்டுக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து  ஜூலை 16ம் தேதி தூங்க சென்றவர் மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் பெற்றோர் கதவை தட்டிப் பார்த்த நிலையில்   ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்

உடனடியாக  பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அஸ்வினி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  அஸ்வினியின் பெற்றோர், தன்னுடைய மகளை விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக  புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார்  வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

டு வருகின்றனர்.