கால்வாயில் செல்ஃபி எடுத்தபோது இளைஞர் தவறி விழுந்து மாயம் !
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் அழகைக் காண பொதுமக்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதும், அதேபோன்று வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த யாசிக் (22) மற்றும் அவரது நண்பர்கள் நால்வரும் நேற்று மாலை பூண்டிக்கு சென்றனர்.

அங்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக வரும் நீரை ரசித்துக் கொண்டிருந்த யாசிக், செல்ஃபி எடுக்க முயன்றபோது திடீரென தண்ணீரில் வழுக்கி விழுந்தார். வேகமாக வந்த நீரின் அடியில் சிக்கிய அவர் தத்தளித்தபோதும், நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்க முடியவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணி மேற்கொண்டனர். இரவு நேரமாகியதால் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, பூண்டி நீர்த்தேக்கப் பகுதியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பொதுமக்கள் அதை புறக்கணிப்பதால் விபத்துகள் தொடர்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
